திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் கிராமம், தாழை ஆறு கடந்த சில தசாப்தங்களாக நீர்வரத்து குறைவால் பாதிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக நீர் வரத்து குறைந்ததால் தாழையாறு வறண்ட நிலையில் தள்ளப்பட்டது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உப்பாற்று கலிங்கி உயர்த்தி கட்டப்பட்டதால், ஜம்பேரியில் இருந்து தாழையாற்றுக்கு நீர் செல்லும் வழி மறைக்கப்பட்டு, ஆறு முழுமையாக வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் கோட்டப்பாளையம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனத்துக்கான நீரை இழந்து பெரும் இழப்பை சந்தித்தன.
இந்த நிலைமையை மாற்றும் நோக்கில், ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தலைவர் பிரதாப் செல்வம் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்கம் சார்பில், ஜம்பேரி குமிழியில் இருந்து தாழையாற்றுடன் இணையும் பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பழைய வாய்க்கால்கள் மீட்கப்பட்டன.
இதன் பலனாக, தற்போது ஜம்பேரி ஏரியில் இருந்து தாழையாற்றுக்கு மீண்டும் நீர் பாயும் நிலை உருவாகியுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பாசன வசதி மீண்டும் கிடைத்ததால், கோட்டப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விவசாயிகள், “நீண்ட காலம் வறண்டிருந்த தாழையாற்றில் மீண்டும் நீர் பாய வழிவகுத்த ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கும் தலைவர் பிரதாப் செல்வத்துக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சங்கம் அமைந்ததற்கும், ஒத்துழைப்பு வழங்கிய நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments