Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம், தர்ணா போராட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவை துறையில் பணியாற்றிவரும் அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனிஊதியம் வழங்கவேண்டும், சிறப்பு பணிபாதுகாப்பு சட்டத்தை இயற்றவேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25 சதவீதமாக மீண்டும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.

வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக இன்றையதினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 800 வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன், ஆட்சியிறு அலுவலகத்தில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டத்தால் தேர்தல் பணிகள் மற்றும் அரசுதுறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை சங்கங்களை அழைத்துப் பேசி உடனடியாக தீர்வு எட்டா விட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் மற்றும் அரசு ஒப்புதல் அளித்துவிட்டு தற்போதுவரை காலம்தாழ்த்துவது ஏன் என்றும் தமிழக அரசை கேள்வி எழுப்பினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *