திருச்சி முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்மாடசாமி, வருவாய் துறை சட்ட ஒழுங்கு பிரிவில் இருந்து மனுக்கள் பரிசீலனை பிரிவுக்கு (முதல்வரின் முகவரி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி ஒருங்கிணைப்பு, மக்கள் குறைதீர் நாள் மனுக்கள், முதலமைச்சருக்கான மனுக்கள்) இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன்பாக வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகள் குழு கூட்டத்தில், வருவாய்த் துறையினரின் பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி, காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், அரசு கொடுக்கும் கால அவகாசத்தை நீட்டித்தல், போதுமான ஆட்கள் இல்லாமல் புதிய திட்டங்களை அறிவிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் வழங்கிய பின்னர், பொன்மாடசாமி மீது பணியிடம் மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சங்கத்தினர் குற்றம் சாட்டினர். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments