திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் தன்னாட்சி நூலக RDFI மேலாண்மை அமைப்பின் தொடக்க விழா மற்றும் நூலக தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 3.05 2025 காலை 11:30 மணிக்கு கல்லூரியின் நூலகத்தில் நடைபெற்ற விழாவில் நூலகத்தின் நவீனமயமாக்கல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
முக்கிய விருந்தினராக பாரதிதாச பல்கலைக்கழகத்தின் முனைவர் நூலகர் மற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ் .டி ஸ்ரீனிவாச ராகவன் RDFI மேலாண்மை அமைப்பை தொடங்கி வைத்தார். அவர் உரையில் அமைப்பு நூலகத்தை முழுமையாக தானியங்கி முறையில் செயல்பட உதவும் என்றும் புத்தக சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் உலக அளவில் நூலகங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளின் வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி. நந்தகோபாலன் நூலகம் இலக்குகளையும் அறிவுப் பெருக்கம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடத்தினார்.
நவீன நூலகங்கள் வெறும் புத்தக குவியலாக இல்லாமல் அறிவு மற்றும் ஆராய்ச்சி மையமாக மாறி வருகின்றன என்பதை கூறிய அவர் மாணவர்கள் நூலக வசதிகளை சரிவிகிதமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் கூறினார். இதை அடுத்து கல்லூரி செயலாளர் திரு கே.ரகுநாதன் நூலகப் பயண விருதுகளை வழங்கினார். நூலகத்தை முறையாக பயன்படுத்திய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர் மாணவர்கள் இந்த விருதுகளால் நூலக பயணத்திற்கு மேலும் உற்சாகம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.
தேசிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே குமார் விழாவின் தலைமையேற்று நூலக தொழில்நுட்ப அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இதன் பயன்பாட்டில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.RDFI மேலாண்மை அமைப்பு நூலகத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாகும்.
இதன் மூலம் தானியங்கி புத்தகப் பதிவு மற்றும் திரும்பப் பெறுதல் நூலக உபயோகத்தை எளிதாக்குதல் புத்தகப் பாதுகாப்பு மேம்பட அனுமதி இல்லாமல் புத்தகங்களை எடுத்துச் செல்லும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் தன்னாட்சி முறையில் சேவை நூலகர்களுடன் நேரத்தை சிறப்பாக பயன்படுத்த உதவும் விரைவாக புத்தகத் தேடுதல் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நூலகர் டாக்டர் டி. சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
பேராசிரியர் டாக்டர் எஸ். நீலகண்டன் அவர்கள் நன்றியுரை மூலம் நினைவு பெற்றது.அவர் நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகம் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் நூலக சேவையின் தரத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் உயர்த்தும் ஒரு முக்கியத்துவமான நிகழ்வாக அமைந்தது. தேசிய கல்லூரி தனது அறிவியல் முன்னேற்றத்திற்கும் கல்வியின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று உறுதியாக கூறலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments