திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட இடங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
தங்க நகர், கோட்டப்பாளையம், வைரி, பி.மேட்டூர், புளியஞ்சோலை, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதுடன், சில இடங்களில் தண்ணீரில் முழுகிய நிலையில் காணப்படுகின்றன.
தொடர்ச்சியான மழையால் அறுவடைப் பணிகள் தடைபட்டு உள்ளன. மேலும், நீண்ட நேரம் தண்ணீரில் நின்று கொண்டிருக்கும் நெற்பயிர்கள் முளைத்து விடும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
மழைநீர் வெளியேற்றத்திற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது, “நெற்பயிர் முழுவதும் சாய்ந்துவிட்டது. தண்ணீர் வெளியேற்றப்படாவிட்டால் பயிர் முற்றிலும் சேதமாகிவிடும். என தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments