புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடுகர்பேட்டையில் அனுசாலை அமைக்க வலியுறுத்தி லால்குடி அருகே வடுகர்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் ஆரோக்கியபுரம், வீரமாமுனிவர் நகர், சக்தி நகர், அன்னை நகர் உள்ளிட்ட கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையெடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால் திருச்சி – சிதம்பரம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW







Comments