வேளாண் மசோதா சட்டத்தை ரத்து செய்ய சாலை மறியல் - 100க்கும் மேற்பட்டோர் கைது!!

வேளாண் மசோதா சட்டத்தை ரத்து செய்ய சாலை மறியல் - 100க்கும் மேற்பட்டோர் கைது!!

மத்திய அரசின் வேளான் விரோத சட்டங்களை திரும்ப பெற அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பாக திருச்சி−கரூா் நெடுஞ்சாலையில் ஜீயபுரத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவ சூாியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக கம்யூனிஸ்ட் மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் விவசாயிகளும் முன்னதாக ஜீயபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்து ஊர்வலமாக வந்து கோஷங்களை எழுப்பி பின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது வேளாண் மசோதா சட்ட நகலை எரித்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். 30 நிமிடம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி கரூர் சாலை மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து தடைபட்டது.பின்பு மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதே போல் புறநகா் பகுதிகளில் மனப்பாறை,மருங்காபுாி,வைய்யம்பட்டி, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் நல்லூா், துறையூா், உப்பிலியபுரம், தா.பேட்டை, முசிறி, தொட்டியம் ஒன்றிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தபட்டது.