திருச்சி – கரூர் சாலையில் அன்பிலார் சிக்னல் அருகே கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்ததில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பயனிகள் வந்து செல்கின்றனர்.

பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுகடையில் மது வாங்கும் மதுபிரியர்கள் சாலை ஒரங்களையே திறந்த வெளி பார்களாக மாற்றி உள்ளனர். மேலும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டிலை உடைப்பதும், ஆபாச வார்த்தைகளால் பேசியும், அநாகரியமாகவும் நடந்து கொள்கின்றனர்.

இச்செயல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேருந்து பயணிகளின் அச்சத்தை போக்க காலை, மாலை வேளைகளில் ரோந்து காவலரை நியமித்து சாலையோர பார்களாக மாறுவதை தடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF







Comments