தீபாவளி பண்டிகையை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில் தீபாவளி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் காலை 6-7 மணி நேரம் இரவு 7-8 மணி என இரண்டு மணி நேரம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
நேர கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து பட்டாசு மற்றும் மத்தாப்புகள் வெடித்து வருவதால் திருச்சியில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டுள்ளது.
இதனால் டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட், தலைமை தபால் நிலையம் சாலை, கேகே நகர் சாலை, கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் புகைமூட்டம் அதிகரித்து சாலைகளில் பனிமூட்டம் போல காட்சியளிக்கிறது,
வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments