சாலையோரம் தங்கியிருந்த பெண் கூட்டு பலாத்காரம் - திருச்சியில் 2 பேர் கைது!!

சாலையோரம் தங்கியிருந்த பெண் கூட்டு பலாத்காரம் - திருச்சியில் 2 பேர் கைது!!

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் முன்பு ஆபிஸர்ஸ் காலனி, மதுரம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகம் முன்பு திருச்சி, காட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார். இவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

Advertisement

இதுத்தொடர்பாக வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் மீட்டெடுத்து கொடுத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில் விசாரணை செய்து வந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி , அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா உள்ளிட்ட காவலர்கள் தொடர் விசாரணையில் திருச்சி புத்தூர் கீழே வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த முஸ்தபா(42) விழுப்புரம் மாவட்டம் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சிவா (23)இரண்டு நபர்களை 376 Dபிரிவில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இந்நிலையில் கூட்டு பலாத்காரத்தில் கைதான முஸ்தபா திடீரென தனக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பதாக கூறினார். உடனே அதிகாரிகள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்து எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் எச்ஐவி நோய் தொற்று இல்லை என பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவச் சான்று அளித்தனர்.

தொடர்ந்து மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருப்பவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.