ஆலய ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் திருச்சி மாவட்டங்களில் அடையாளங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய இந்தப் பகுதியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கோவில்களில் தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியை சுற்றிலும் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவானைக்காவல் பகுதியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டும் இல்லாமல் கொலை, கொள்ளை வழக்கு சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (28.10.2021) திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 இளைஞர்கள் கடை ஊழியர்கள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணத்தை அள்ளினர்.
மேலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு பேர் டாஸ்மாக் கடை ஊழியர்களை கையில் கத்தியால் கிழித்து பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் சாலையோரம் பானிபூரி விற்பனை செய்த நபரிடம் அந்த 2 இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இது மட்டுமன்றி போதை தலைக்கு ஏறிய அந்த இளைஞர்கள் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து பானிபூரி கடையிலிருந்து இருவர் கையையும் வெட்டி உள்ளனர். அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் மற்றும் வணிகர்களிடம் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். பின்னர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த ரகு மற்றும் ஜீவா என்ற இளைஞர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவானைக்காவல் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் இதனை பயன்படுத்தும் இளைஞர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், கொலை கொள்ளை அதிகமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments