திருச்சி மாவட்டம் ஜுயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறையில் அருகே ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடப்பதாக ஜீயபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து போலீசார் விரைந்து அப்பகுதிக்கு சென்று ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர்.

அதனை சோதனை செய்த பொழுது அது ஒரிஜினல் ராக்கெட் லாஞ்சர் மருந்து எதுவும் அதில் இல்லை. யார் இதை பயன்படுத்தியது நீரில் வந்து கரை ஓதுங்கியதா என்பது குறித்து ஜீயபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ராக்கெட் லாஞ்சரின் பாகத்தை 117 பிரதேச ராணுவ படை அதிகாரிகளிடம் ஒப்படைக்க திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். ராக்கெட் லாஞ்சர் எப்படி மிதந்து இங்கு வந்தததா?

வேறு யாரும் கரையோரமாக போட்டு சென்றார்களா என்பது குறித்து எஸ்.பி தொடர்ந்து சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments