Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டு நிறைவு செய்த வந்தே பாரத் மிஷன் விமானங்கள் –  இரண்டு அன்னையர்கள் ஆற்றிய பெரும் பங்கு

கொரோனா கால ஊரடங்கு என்பது  2020 ம் ஆண்டு உலகெங்கிலும் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து ‘வந்தே பாரத் மிஷன்’  என்ற பெயரில் விமானங்கள் இயக்கப்பட்டது. 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் மிஷன்  விமானங்கள் முதல் ஆண்டை இன்றுடன்  நிறைவு செய்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி 179 பயணிகளை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக இந்த பயணத்தின் முதல் விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. வந்தே பாரத் மிஷன்  கீழ் சுமார் 995 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 1.45 லட்சம் பயணிகளை விமான நிலையம் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர் .995 இல் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் (262 விமானங்கள்) சிங்கப்பூரிலிருந்து மட்டும் இயக்கப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து துபாய்க்கு 220 விமானங்களும் , 113 விமானங்கள் கோலாலம்பூரிலிருந்தும் இயக்கப்பட்டன.  சென்னை, ஹைதராபாத் ,பெங்களூர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை விட அதிகமான பயணிகளை மீட்கொணர்ந்த   பெருமையை திருச்சி சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது.

மே 9ஆம் தேதி திருச்சியில் இருந்து இயக்கப்பட்ட வந்தே பாரத் மிஷன் விமானங்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு  பெண் குழுவினர்களால் பறக்கவிடப்பட்டது. பேரிடர்  காலகட்டத்தில் சவாலான சூழ்நிலையில் ஆண் பைலட்டுகள் இயக்குவதற்கு தயங்கிய நிலையில்  தன்னுடைய தைரியம் துணிச்சலால்  விமானத்தை  இயக்குவதற்காக முன் வந்தவர் பைலட் கவிதா ராஜ்குமார. 

திருச்சியிலிருந்து அதிக விமானங்கள் இயக்கப்பட்டது  சிங்கப்பூருக்கு தான் .சிங்கப்பூரில் மைதிலி  என்ற ஒற்றை  பெண்மணி தான் இத்தனை சவால்களையும் சமாளித்து அதிக  விமானங்கள் இயக்குவதற்கான தனி ஒருவராக  போராடி இருக்கிறார். தமிழகத்திற்கு விமானங்களே இல்லாதபோது,  சமூக வலைதளங்களை  பயன்படுத்தி துறைசார்ந்த அலுவலர்களிடம்  பேசி தன்னால் முடிந்த வகையில் இது  இன்று வரை உதவிக் கொண்டிருக்கிறார். 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வந்தே பாரத் மிஷன் ஓராண்டு நிறைவு செய்ததில் இந்த இரண்டு அன்னையர்களுக்கும்  மிகப்பெரிய பங்கு உண்டு என்றே கூறலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *