ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் கபடி போட்டி ,கோ_கோ போட்டி, சிலம்பம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியை உமா முன்னிலை வகித்தார்.
*ஈவண்ட் சேர்மன் மற்றும் பிக்சல் பிளஸ், PET PLUS மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Rtn. அருண்ராஜா* கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் அவர் மாணவர்களிடம் பேசுகையில் வகுப்பறையும் விளையாட்டு திடலும் ஒன்று என நினைக்க வேண்டும். காரணம் வகுப்பறை போல் விளையாட்டு திடலிலும் தனிநபர் போல் இல்லாமல் குழு மனப்பான்மை மேலோங்கும், இணைந்து செயல்பாடுகளை செய்ய முடியும். வெற்றி என்ற இலக்கை நினைத்துக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடும்போது இலக்கை அடைய முடியும்.
இன்றைய நாளில் நாம் நினைவு கூறும் ஹாக்கி வீரர் தியான் சந்த அவர்கள் செய்த சாதனைகள் எண்ணிலடங்கா.
1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டின் பெருமையை உலகறிய செய்தார் . 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தை கண்ட ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் அவருக்கு ஜெர்மன் குடியுரிமை மற்றும் ராணுவத்தில் உயர் பதவியை வழங்குவதாக அழைப்பு விடுத்தார் ஆனால் தியான் சந்த் அதை மறுத்துவிட்டார் அவ்வளவு நாட்டு பற்று மிக்கவர். அவரது பெயரால் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகள் வழங்குகிறார்.
விளையாட்டு என்பது உடலையும் மனதையும் இணைக்கும் ஒரு பாலம். இக்கூற்றுக்கு ஏற்ப தேசிய விளையாட்டு தினத்தை நாம் கொண்டாடுகிறோம் என்று கூறினார். ஆசிரியர்கள் சரண்யா, மோகனா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments