ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் சங்கம், இன்று தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் கல்வி தந்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடியது.
சமூக சேவை மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான சங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் Rtn M ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் Rtn K S ஜீவானந்தன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சங்கச் செயலாளர் Rtn T சுப்பிரமணியன், முன்னாள் துணை ஆளுநர் Rtn M பார்த்த சாரதி, Youth Service இயக்குனர் Rtn S பாண்டியன், மற்றும் Family Meet இயக்குனர் Rtn L பிரபாகர் மற்றும் Rtn. Suresh ஆகியோர் பங்கேற்றனர்.
கல்வி வளர்ச்சி நாளின் முக்கிய அம்சமாக, இப்பள்ளிக்கு இரண்டு முறை வருகை தந்த காமராசர் அவர்களை பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது குழந்தைகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களின் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறிய பரிசுகள், குழந்தைகளின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ததோடு, கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தும் ஒரு அடையாளமாகவும் கல்வி வளர்ச்சி நாளில் அமைந்தது.
மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் சங்கத்தின் தலைவர் ஜோசப் ராஜ் பேசுகையில் இந்த முயற்சி, உள்ளூர் சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இத்தகைய நிகழ்வுகள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவுவதோடு, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன. சங்கம் தொடர்ந்து இதுபோன்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டு, கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்குப் பாடுபடும் என்று உறுதிபூண்டுள்ளது என்றார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை சரண்யா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments