ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை 10வது உரையாடல் நாள் மற்றும் புதிய உறுப்பினர்கள் வழிகாட்டுதல் நிகழ்வு 30.08.2025 மிகச் சிறப்பாக தலைவர் Rtn S. நித்யா மற்றும் செயலாளர் ரேவதி ஆகியோர் தலைமையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினரான ரோட்டரியன் AG மேஜர் டோனர் சுபா பிரபு அவர்கள் ரோட்டரின் சிறப்பு அம்சங்களையும் மிகத் தெளிவாக விளக்கியதோடு Rtn. கீதா முத்துசெல்வன், Rtn தம்ஜு நிஷா, Rtn டயானா ஜான் இவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கினார்.
இந்த சங்கத்தை 10 வருடங்களாக சிறப்பாக வழி நடத்தி வந்த Rtn. வித்யா Rtn. யசோதா ,Rtn சுபத்ரா
,Rtn காஞ்சனா,Rtn. ஜானகி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை தலைவர் Rtn S. நித்யா அவர்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்,அதுமட்டுமன்றி மேலும் இந்த வருடம் 15 புது உறுப்பினர்களை இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களையும் அவர் இவ்விழாவில் கௌரவ படுத்தினார்.
விழாவின் நிறைவு பகுதியாக கிளப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இனி அடுத்து வரவிருக்கும் எல்லா திட்டப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்போம் எனும் உறுதி அளித்து விடை பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments