திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற மின்சார வாரிய அதிகாரியிடம் பணம் கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் காந்தி நகரை சேர்ந்தவர் இளங்கோ ( 62 ) இவர் ஓய்வு பெற்ற மின்சார வாரிய அதிகாரி. இந்நிலையில் வீட்டிலிருந்த இளங்கோவிடம் குண்டூர் அயன் புத்துரை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜா (எ) அற்புத ஆரோக்கியராஜ் (45)
இளங்கோவிடம் பணம்கேட்டு தகாத வார்த்தையால் திட்டி இளங்கோவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளான் இச்சம்பவம் குறித்து இளங்கோ நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா (எ ) அற்புத ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments