திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மோட்டார் பைக்கில் கொண்டு வரப்பட்ட ரூ.1,32,360 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து லால்குடி வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர்.

லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது விக்னேஷ் என்பவர் உரிய ஆவணங்களின்றி மோட்டார் பைக்கில் ரூ.1,32,360 பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லால்குடி வருவாய் வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் பணத்தை சரிபார்த்த வட்டாச்சியர் சீலிடப்பட்ட கவரில் வைத்து கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 10 April, 2024
 10 April, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments