தஞ்சாவூர் மாநகரில் கடந்த இரு தினங்களாக நகரின் பல்வேறு இடங்களில் நாய் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், “படத்தில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த (23.05.2024) முதல் காணவில்லை. நாயின் பெயர் சிம்பா, கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சார்ந்த, வெள்ளை நிறத்திலான இரண்டு வயதுடைய நாய்.
இதனைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என தமிழிலும், ஆங்கிலத்திலும் சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments