Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் ஆவணமின்றி ரூ.94,500 பறிமுதல் – பறக்கும் படை தீவிர சோதனை

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சேதுராப்பட்டி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் 94 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துச் சென்றதை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து உரிய ஆவணம் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றாலும் அல்லது பரிசு பொருட்களை உரிய ஆவணம் என்று எடுத்துச் சென்றாலும் அவற்றை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை நியமித்துள்ளது.

அதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் வாகன தனிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டசேதுராப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும்படையான எஸ் எஸ் டி குழுவினர் கலைவாணி தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது சேதுராபட்டி பகுதியில் காரில் உரிய ஆவணம் இன்றி மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்ற ஜோதி என்பவர் காரை சோதனை செய்தபோது 94,500 ரொக்கம் இருப்பதே தெரிய வந்தது அதன் அடிப்படையில் அதனை கைப்பற்றி தேர்தல் பறக்கும் படையினர் உதவி தேர்தல் அலுவலரான ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வகணேசிடம் ஒப்படைத்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *