திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு அழைப்பு கொடுக்காமல் அரசின் லேப்டாப் திட்டத்தில் மாணவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அவருடைய தொகுதியிலேயே கொடுத்து சென்றதால் ஆத்திரம் அடைந்து முதல்வர் வரை புகார் செய்தார்.
மேலும் அவரை மரியாதை குறைவாக நடத்துவதாக கட்சி தலைமையிடம் புகார் கொடுத்துள்ளார் தொடர்ந்து அவரைப் பற்றிய செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ ராஜினாமா செய்ய போவதாக தகவல் பரவியது. அவர் ராஜினாமா செய்து த வெ க கட்சியில் இணையப் போவதாகவும் செய்தி வந்தது. தொடர்ந்து எந்த தகவலையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் அமைதியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்சி ஆவின் பால் உற்பனை நிலையத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்புகளை தமிழக முதலமைச்சர் என்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வந்தார்.
தொடர்ந்து நிகழ்வில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிக்கு பிறகு உள்ளே அரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குத்து விளக்கேற்றி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஒதுங்கியே நின்றார். ஒரு கட்டத்தில் குத்துவிளக்கை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அழைத்த பிறகு ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஒதுங்கி தான் நின்றார். நிகழ்ச்சி முடித்து காரில் ஏறி செல்லும் போது செய்தியாளர்கள் நீங்கள் தவெகவில் இணைய இருப்பதாக செய்தி வருகிறது என்ற கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் முகத்தை திருப்பியவாறு காரில் வேகமாக சென்றார்.
அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் உள்ளதால் தொடர்ந்து அவர் அப்செட்டில் இருப்பது தெரிகிறது திமுகவில் தான் இருக்கிறேன் என்னை பற்றிய செய்திகள் தவறுதலாக பரப்பப்படுகிறது என்று கூட அவர் சொல்ல விருப்பப்படாமல் சென்றுவிட்டார் மேலும் அவர் என்ன நிலையில் உள்ளார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவே தெரிகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments