Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி – அச்சம் வேண்டாம்: விற்பனையாளர்கள் சங்கம்

​தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவி வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

​தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதன் காரணமாக, திருச்சியில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது. ​வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக தங்கள் வாகனங்களின் எரிபொருள் டேங்குகளை முழுமையாக நிரப்பி (Tank Full) வருகின்றனர்.

​இது குறித்து ஏற்கனவே பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம் அளித்துள்ளதால், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

​சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி மக்கள் பங்குகளில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *