12.08.2025 இன்று திருச்சி மின் பகிர்மான வட்டம் / பெருநகரம் / திருச்சி வட்டத்திற்குட்பட்ட கோட்டம் உபகோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும் களப்பணியாளர்கள் கேங்மேன் ஆகியவர்களுக்கு பணி பாதுகாப்பு வகுப்பு அந்தந்த உபகோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்களில் உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர் ஆகிய அலுவலர்களால் நடத்தபட்டது. வரும் நாட்களில் பருவ மழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக பணிபுரிவது எப்படி, எந்தெந்த உபகரணங்களை எந்தெந்த நேரத்தில் எப்படி பயன்படுத்துவது பற்றியும் பாதுகாப்பு வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்படாமல் பாதுகாப்புடன் வேலை செய்வது குறித்தும் பொது மக்கள் நலனை முன்னிட்டு குறுகிய காலத்தில் மின்தடங்கலை சரிசெய்வதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரத்திற்குட்பட்ட கிழக்கு/திருச்சி நகரம்/திருச்சி, திருவரங்கம், இலால்குடி மணப்பாறை துறையூர் மற்றும் முசிறி கோட்ட அலுவலகங்களுக்குட்பட்ட 21 உபகோட்டங்களில் பணிபுரியும் 628 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments