ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதலாவது புதன்கிழமையன்று நரசிம்மருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி நரசிம்மருக்கு நெய்விளக்கு ஏற்றி, வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் இல்லங்கள் செழிக்கும் என்பது ஐதீகம்.

இதனையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்திபெற்ற காட்டழகிய சிங்கர்பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு இன்றையதினம் 24வது ஆண்டாக சகஸ்ரதீபவழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலக நன்மைக்காகவும், தங்களது இல்லத்தில் எல்லோரும் நலமும் வளமும்பெற்று வாழவேண்டியும் ஆலயவளாகம் மற்றும் பிரகாரங்களில் மாக்கோலமிட்டு, பின்னர் குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்கில் நெய்யிட்டு சகஸ்ரதீபம் ஏற்றி நரசிம்மரை வழிபாடு செய்தனர். முன்னதாக ஆழ்வார் திருநகரி ரெங்க ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் சகஸ்ர தீப வழிபாட்டை தொடங்கிவைத்தார்.

தீப ஒளியை போன்று தங்களது வாழ்க்கையும் பிரகாசமாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments