தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டுத்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும்.
கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்று உண்டியல் காணிக்கையை எண்ணுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டது.
இதில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சத்து 3 ஆயிரத்து 336 ரொக்கமும், 2 கிலோ 867 கிராம் தங்கமும், 6 கிலோ 815 கிராம் வெள்ளியும்,
82 அயல்நாட்டு நோட்டுகளும், 453 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments