திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (11.12.2025) உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. உண்டியல் திறப்பு பணிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன், எம்.சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர், பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்,
சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், கி.உமா, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பெரம்பலூர், கவிதா, உதவி ஆணையர்/பொருளாளர் மற்றும் மேலாளர், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சாவூர், திருக்கோயில்
கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள், கொனலை ஆகியோரும் பங்கேற்றனர்.
உண்டியல் காணிக்கை விவரம்
நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள் முதன்மை திருக்கோயில் 6,54,33,348 ரொக்கம், 1 கிலோ 445 கிராம் பொன் இனம், 1 கிலோ 860 கிராம் வெள்ளி இனம், 88 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 494 அயல்நாட்டு நாணயங்கள். இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 26.11.2025.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments