தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் சக்திஸ்தலங்களில் ஆதிபீடமாகவும், சுயம்பு அருள்மிகு மாரியம்மன் எழுந்தருள்பாலிக்கும் இத்தலத்தில் தைப்பூசத் திருவிழா 23.01.2026 வெள்ளிக்கிழமை முதல் 02.02.2026 திங்கட்கிழமை வரை வெகு சிறப்பாக நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நிகழவிருப்பதால் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று அம்மன் திருவருளுடன் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
1-ம் திருநாள் 23.01.2026 வெள்ளிக்கிழமை தை மாதம் 09ம் தேதி ஷஷ்டி திதி பூரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் மகர லக்னத்தில் (த்வஜா ரோஹணம்) கொடியேற்றம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 6:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல். மண்டகபடிதாரர்: ம.அய்யப்பன், திருச்செந்தூர்
2-ம் திருநாள் 24.01.2026 சனிக்கிழமை தை மாதம் 10 ம்தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்.
மண்டகபடிதாரர்: P.ஆறுமுகம், ஈச்சம்பட்டி
3-ம் திருநாள் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர பூத வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்
மண்டகபடிதாரர்: R.மாரிமுத்து, திருமணமேடு.
4-ம் திருநாள் 26.01.2026 திங்கட்கிழமை தை மாதம் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாரதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்.
மண்டகபடிதாரர்: P.நடேசன், வெல்லமண்டி, திருச்சி.
5-ம் திருநாள் 27.01.2026 செவ்வாய்கிழமை தை மாதம் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்
மண்டகபடிதாரர்: ஆறுமுகம், கண்ணியாகுடி, திருச்சி
(கடந்த ஆண்டில் நடைபெற்றதை போலவே திருக்கோயிலில் உற்சவர் சன்னதியில் உபயம் நடைபெறும்)
6-ம் திருநாள் 28.01.2026 புதன்கிழமை
தை மாதம் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் மர யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்
மண்டகபடிதாரர்: சிதம்பரம் தேவிமங்கலம்.
7-ம் திருநாள் 29.01.2026 வியாழக்கிழமை தை மாதம் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாரதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 ம ணிக்கு மூலஸ்தானம் சேருதல்
மண்டகபடிதாரர் :பழனியாண்டி குமாரர்கள், ஈச்சம்பட்டி.
8-ம் திருநாள் 30.01.2026 வெள்ளிக்கிழமை தை மாதம் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று இரவு 9:00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்.
மண்டகபடிதாரர் :சந்தோஷ்பிங்களே, சென்னை.
9-ம் திருநாள் 31.01.2026 சனிக்கிழமை
தை மாதம் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மாலை 5:00 மணிக்கு அபிஷேகம் 7:00 மணிக்கு மஹாதீபாராதனை இரவு 8:00 மணிக்கு அம்மன் தெப்பத்தில் காட்சியளித்தல் இரவு 11:00 மணிக்கு திருவீதி உலா வந்து ஆஸ்தான மண்டபம் சேருதல்
மண்டகபடிதாரர்: கே.சுப்ரமணியன், தென்னூர், திருச்சி – 17.
10-ம் திருநாள் 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை
தை மாதம் 18ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் திருக்கோயிலில் இருந்து அம்மன் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி (புறப்பாடாகி) வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைதல்.
மண்டகபடிதாரர்: M.M.D.பாலாஜி மதுரை.
01.02.2026 ஞாயிற்றுக்கிழமை வட திருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருளுதல் : திருக்கோயில் உபயம் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சி 02.02.2026 திங்கட்கிழமை
இரவு 1:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை
மகா அபிஷேகம் அதிகாலை 3:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தல் எம்.சூரியநாராயணன், எம்.எஸ்சி., பி.எல்., இணை ஆணையர்/செயல் அலுவலர், அறங்காவலர்கள் P.பிச்சைமணி சுகந்தி இராஜசேகரன் M.A., D.Co-Op., சேது லட்சுமணன் B.A.,
V.S.P.இளங்கோவன்
அறங்காவலர் குழுத்தலைவர்.
11ம் திருநாள்: 02.02.2026 திங்கட்கிழமை தை மாதம் 19ம் தேதி காலை 6:00 மணிக்கு வட திருக்காவேரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி (புறப்பாடாகி) நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 11:00 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சேருதல். இரவு 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி படம் இறக்கி (த்வஜா அவரோஹணம்) இரவு 12:00 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று திருக்கோயில் நடை சாத்துதல்.
தெப்பத்திற்கு பூ அலங்கார உபயம்
S.சிவக்குமார், S.சபரிசன், தில்லைநகர், திருச்சி
தைப்பூசத்திற்கு வடகாவேரியில் வாண வேடிக்கை உபயம்: சுகன்ராஜ், RK திருச்சி பல்லாக்கு பராமரிப்பு நொச்சியம் முதல் கொள்ளிடம் வரை மின் விளக்கு அமைத்தல், டிராக்டர் உபயம் கே.பி.ஏ.செந்தில் (எ) கார்த்திகேயன், மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் மாதவப் பெருமாள் கோவில் என்றும் இறைப்பணியில் VL வித்யா குழுமம், VL வித்யா மஹால், No. 1&2, ஜெயம் வேலாயுதம் கார்டன், MM நகர், உய்யக்கொண்டான் திருமலை, வயலூர் ரோடு, திருச்சி – 102.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments