Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஆலயம் என்பது இதன் சிறப்பு. ஆடி மாதத்தின் போது அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இன்று ஆடி மாதம் முதல் வெள்ளி என்பதால் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்பாள் காலையில் துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பின்னர் உச்சிகாலத்தில் லட்சுமியாகவும்,, மாலையில் சரஸ்வதியாகவும், இரவில் வராகியாவும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.

ஆடி வெள்ளியையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. அம்பாளை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்துவருகின்றனர்.

ஆலயத்தில் வந்து அம்பாளை தரிசனம் செய்ய பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோவிட் தொற்று காலத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *