சுகாதார கழிப்பறை என்ற வார்த்தையை இந்திய அளவில் பிரபலப்படுத்தியவர் பத்மஸ்ரீ மராச்சி சுப்புராமன்:

சுகாதார கழிப்பறை என்ற வார்த்தையை இந்திய அளவில் பிரபலப்படுத்தியவர் பத்மஸ்ரீ மராச்சி சுப்புராமன்:

71 வயதாகும் மராச்சி சுப்புராமன் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாகவே பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இவர் முதலில் 1986ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த Society for Community Organisation and People's Education (SCOPE) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 

1996 ஆம் ஆண்டில் ஸ்கோப்பின் கவனம் சுகாதாரத் துறையை நோக்கித் திரும்பியது. பொதுவெளியில் மலம் கழிப்பது குறித்தும், கழிப்பறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

 திருச்சி மாவட்டம் முசிறி சாளியார் பகுதி, காவிரி கரையோரப் பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க  சமுதாய கழிப்பறைகளை 
பயன்படுத்தும் மக்களுக்கு காசு கொடுத்து அவர்கள் கழிப்பறை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தினார்.

இடத்திற்கு தகுந்த கழிப்பறைகள் கட்ட வேண்டும் என்று கழிப்பறை கட்டமைப்புகள் குறித்த  விழிப்புணர்வு  இன்றைக்க்கும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.

 கழிப்பறையில் தனிக் குழாய்கள் அமைத்து சிறுநீரை தண்ணீருடன் கலந்து வயல்வெளியில் பயன்படுத்துவது,  அனைவரும் குறைந்த செலவில் கழிப்பறை கட்டி பயன்படுத்துதல் என்கிற விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார். 

மக்கள் பயன்பாட்டிற்காக இந்தியா முழுவதும் 25000 சூழல் மேம்பாட்டு கழிவறைகளையையும்,உறிஞ்சி குழிகழிவறை  1லட்சம் கழிவறைகள் கட்டியுள்ளார்.

சூழல் மேம்பாட்டுகழிவறைக்கு செரிமான தொட்டி அமைப்பு தேவை இல்லை, தரைக்கு மேல் இரண்டு பிரிவுகளாக கட்டடம் கட்டி அதன் மேல் கழிவறை கோப்பையை பதித்து பயன்படுத்த வேண்டும்.

 இதில் மலம் தண்ணீர் கழிவு நீர் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணையாமல் தனித்தனியாக சேகரிக்கப்பட்ட விவசாயத்திற்காக மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம் இதனால் மண் வளமும் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது.  

குறைந்த தண்ணீர், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், மனிதக் கழிவுகளை தரம் பிரித்து, உரமாக பயன்படுத்தும் வகையில் கம்போஸ்ட் கழிவறை களை உருவாக்கி சாதனை படைத்து வருவதற்காக சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான 2005ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதைப்பெற்றுள்ளார். 

2006-ம் ஆண்டு, 'நிர்மல் கிராம் புரஸ்கார்' விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.

இவர் உருவாக்கியுள்ள இந்தக் கழிவறைகளைப் பார்க்க, லண்டன், ஜெர்மனி, நார்வே, நெதர்லாந்து, சுவீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்துசென்றுள்ளனர் என்பதே இது எத்தகைய சாதனை என்பதற்கு சாட்சி!


மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் சிறப்பான பணியை முன்னெடுத்ததற்காக 2021 ஆண்டுக்கான  பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

சுப்புராமன் அவர்களை
தொடர்பு கொண்டு பேசியபோது அவர் பகிர்ந்து கொண்டவை,  

இந்த  கழிவறை திட்டம் குறித்து பல மக்களுக்கு சென்றடைவதற்கு உதவும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 இன்னும் தொடர்ந்து  இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிடைமட்ட கிராமப்புற மக்களுக்கும் கழிப்பறை பயன்பாடு   குறித்த விழிப்புணர்வை அரசோடு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.


கிராமப்புறங்களில் இன்றைக்கு  வீட்டிற்கு  ஒருவர்   செல்போன் வைத்திருக்கிறார்கள் ஆனால் அனைவரது வீட்டிலும் கழிவறை இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே!
இந்தநிலை மாறவேண்டும் என்பதே
நாங்கள் எடுத்து வைக்கும் முயற்சிக்கான வெற்றி.

பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் நவீன கருவிகளைக் கொண்டு கழிவுகள் அகற்றபட்டாலும் கழிவுகள் நீர்நிலைகளில்  அல்லது ஏதேனும்  ஊரின் எல்லையில் கொட்டப்படுகிறது .
இதனை தடுப்பதற்கான  சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டாலும் அவை இன்றும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை அவை அனைத்திற்கும் ஒரு நிரந்தர தீர்வு இந்த  சூழல் மேம்பாட்டு சுகாதார கழிப்பறைகளே என்றார்.

இவர் முன்னெடுத்துள்ள செயல்திட்டங்களை அங்கீகரிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல விருதுகள் அளித்துள்ளது.

 இப்போது கிடைத்துள்ள பத்மஸ்ரீ விருது இவருடைய முயற்சிக்கான மாபெரும் அங்கீகாரம்.இவர்
 செயல்படுத்தி கொண்டிருக்கும் இத்திட்டங்களை உலகறியச் செய்து இந்தியா முழுவதும் அத்திட்டத்தை செயலாக்கம் செய்வதே இந்திட்டத்திற்கான ஆக சிறந்த விருது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/Trichyvision