Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கோவிட் தொற்றால் தமிழகத்தில் பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3593 பேர் என மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி திருச்சியில் பேட்டி

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பாதிப்பு குறித்தும், 3வது அலையில் குழந்தைகள் பாதிக்காதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குழந்தைகள் தொடர்பான துறை அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பங்கேற்கும் மறு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றதில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்பட்டு விவாதிக்கப்பட்டது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில்… 20 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தை இல்லங்களை ஆய்வு செய்ததுடன், மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் கன்னியாகுமரி தொடங்கி நடைபெறுகிறது. மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் நடத்தி குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருப்பதாலும், பள்ளிக்குச் செல்லாதனாலும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பலதவறுகள் நடந்துள்ளது. இனிவரும்காலங்களில் நடக்ககூடாது என்றவகையில் விழிப்புணவர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும், ஆன்லைனில் படிக்கிறார்கள் என்பதால் கண்காணிக்காமல் விட்டு விட்டு இருக்ககூடாது.

மதுரையில் காப்பகத்தில் குழந்தைகள் விற்பனையினைத்தொடர்ந்து மாவட்டந்தோறும் 150 குழந்தை இல்லங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் விபரம், பாதுகாப்பு குறித்து சமூகநல்துறையினர் கணக்கெடுத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது வரை கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த  குழந்தைகளை் 93 பேர், 1 பெற்றோரை இழந்தவர் 3593 பேர் உள்ளனர், இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் காப்பகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களும், திருச்சியில் 21 பதிவுசெய்யப்பட்ட குழந்தை காப்பகமும், 1 எஸ்எஸ்ஏ குழந்தை காப்பகமும், அரசினர் இல்லங்கள் 3ம், உதவிபெறும் இல்லங்கள் 4ம், தத்தெடுக்கும் மையம் 1 செயல்படுகிறது என்றும், தற்போது 17 இல்லங்களில் மட்டும் 218 குழந்தைகள் மட்டும் உள்ளனர் என்றும், எஞ்சிய குழந்தைகள் பாதுகாவலரோடு மாவட்ட குழந்தைகள் குழுவின் அனுமதியுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *