சாஸ்த்ரா சட்டப் பள்ளியில் சட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி இருக்கை துவக்கம்
நமது நாட்டில் நீதிமன்றங்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருந்து வந்துள்ளன.பாராளுமன்றத்தில் நிகழும் தவறுகளைக் கூட கட்டுப்படுத்த அவைகள் தவறியதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் தெரிவித்தார்.
நீதிமன்றங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என தான் விழைவதாக கூறினார். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சட்டப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது எம்.கே நம்பியார் நினைவு சொற்பொழிவுவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.
அடிப்படை உரிமைகள் தொடர்ந்து வளப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19, 21, 22, 31(A) 31(b )மற்றும் 46 ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசினார்.
மேலும் பேசிய அவர் கீழ்காணும் வழக்குகளை தொடர்பு படுத்திப் பேசினார். ரோமேஸ் தாப்பர், பிரிஜ் பூசன் , மோட்டார் வாகன தேசியமயமாக்கல் ,சம்பகம்தொரையரசன் மற்றும் சமீன்தாரி ஒழிப்பு சட்டம்.
ஏ .கே .கோபாலன் மற்றும் கோகுல்நாத் வழக்கில் எம்.கே நம்பியார் எடுத்துக் கொண்ட முயற்சிகளை பாராட்டினார்.
இவரது வாதம் கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை நிலைநாட்ட பயன்பட்டது என விளக்கினார்.
நீதிபதியின் நரிமன் சாஸ்த்ரா சட்டத்துறையில் நிறுவப்பட உள்ள சட்ட மற்றும் அதன் வளர்ச்சிக்கான இருக்கையை துவக்கி வைத்தார்.
இந்த இருக்கைக்கு ஆதரவளித்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் இதன் நோக்கத்தை விவரித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம்.என் வெங்கடாசலய்யா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில் சட்டம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான தொடர்பை நன்கு புரிந்து கொள்ளும்படி சட்டத்துறை மாணவர்களை கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் தனது சட்ட தொழிலில் தனது தந்தை எ ம்.கே நம்பியாரின் தாக்கம் பற்றி எடுத்துரைத்தார் .
முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் பேசுகையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமன்னார் முன்னிலையில் எம் கே நம்பியார் செய்த சிறப்பான வாதத்தை நினைவுகூர்ந்தார் .
எம். கே நம்பியாரின் பேரன் பேசுகையில் இந்த ஆராய்ச்சி இருக்கை அமைத்தது குறித்து சாஸ்த்ராவையும் சி.எஸ் வைத்தியநாதனையும் பாராட்டினார்.
இந்த இணையவழி நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சாஸ்த்ரா துணைவேந்தர் டாக்டர்.சி.எஸ் வைத்தியசுப்ரமணியம் இந்த நிகழ்ச்சி 300 வருட சட்ட அறிவின் மொத்த வெளிப்பாடாக அமைந்தது என்றார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I