தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமது முனைவர் பட்ட ஆய்வை (Ph.D.) வெற்றிகரமாக முடித்து, டாக்டர் பட்டம் பெற்றார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், 2021ஆம் ஆண்டு முதல் தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில், “உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றல் (Physical Activity for Skill Development Through Machine Learning)” என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு வந்தார்.
இந்த ஆய்வானது, திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் முனைவர் திரு.து.பிரசன்ன பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (நவம்பர் 17ஆம் தேதி) மாலை 4.30 மணியளவில், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் அமைச்சருக்கான முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Physical Education and Sports University) டாக்டர் S.திருமலை குமார் அவர்கள் ஆய்வின் வெளிப் பரிசோதகராக (External Examiner) கலந்துகொண்டு தேர்வை நடத்தினார்.
வாய்மொழித் தேர்வின் முடிவில், வெளிப் பரிசோதகர் டாக்டர் S.திருமலை குமார் அவர்கள், திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்குரியவர் என அறிவித்து, அவரை “முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி” எனப் பிரகடனம் செய்தார்.

இந்த ஆய்வானது, கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியப் பகுதிகளை இணைத்து ஆய்வு செய்தது. இதன் முக்கிய நோக்கம்:
உடற்கல்விச் செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு (உடல், மனம், சமூகம்) எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆய்வு செய்தல்.
கணினிசார் நுண்ணறிவுத் தொழில்நுட்பமான இயந்திரக் கற்றலை (Machine Learning) பயன்படுத்தி, உடற்கல்விச் செயல்பாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வது.
இந்த ஆய்வின் மூலம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பள்ளி மாணவர்களின் உடற்கல்வித் திறன்களையும் முழுமையான வளர்ச்சியையும் அறிவியல் பூர்வமாக மேம்படுத்துவதற்கான வழிகள் கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments