திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணையில் இருந்து திருவரம்பூர் வரை பிரபலமான பள்ளிகள், வணிக வளாகங்கள், பிரபல வர்த்தக நிறுவனங்கள் போன்றவை அமைந்துள்ளன.
திருச்சியில் உள்ள பிரதான பள்ளிகளான மான்போர்ட், செல்லம்மாள், கலாலயா, ஆர் எஸ் கே, லிட்டில் பிளவர் அமைந்துள்ளன. பால்பண்ணை -திருவரம்பூர் சாலையில் 15 வருடங்களுக்கு மேல் சர்வீஸ் ரோடு பிரச்சனை உள்ளது. அதற்கு தற்பொழுது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சாலையில் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும்,மிக கனரக வாகனங்களும் தனியார் பேருந்துகளும்,அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு காலை வேளையில் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளன. காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த சாலை வழியே அனைவரும் பயணிக்கின்றனர்.
இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கைலாஷ் நகர் ரோட்டில் ரவுண்டானாவில் பாலமுருகன் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. அங்கு தினசரி அத்தியாவசிய பொருள் வாங்க வரும் மக்களால் அந்த இடம் காலை வேளையில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும். மான்ஃபோர்ட்டில் மாணவர்களை பள்ளியில் விட்டு சென்று திரும்பி வரும் பெற்றோர்களும், தனியார் ஆட்டோ,வேன்களும் அந்த வழியையே உபயோகிக்கின்றனர்.
தவறான பாதையில் வருகின்றனர். சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனத்தில் வருவோரும் செல்வோரும் அனைத்து வழிகளிலும் வந்த வண்ணம் சென்ற வண்ணம் உள்ளனர்.இதுவரை காவல் துறை இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்காணிப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதில் மிகவும் அச்சப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியான திருவரம்பூரிலேயே பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது
காலை,மாலை பள்ளி நேரங்களில் ஆவது காவல்துறையினர் அங்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டிய காவல்துறையே அதை சரி செய்யாமல் அபராதம் வசூலி ப்பதற்கு மட்டுமே அங்கு உள்ளனர்.
இனி வரும் காலங்களிலாவது காவல்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்துவிபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
Comments