திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்தை சேர்ந்த திருநெடுங்குளம் 3 வார்டு தேவரயநேரியில் உள்ள முதலாம் ஆண்டு தொடக்க பள்ளி செயல்படு வருகிறது. 1955-ல் கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தின் இடமானது ஒரு தனி நபருக்கு சொந்தமானது. பொதுமக்களுக்காக வழங்கப்பட்டது.
இந்த நிலத்தினை தற்போது அவரது குடும்பத்தினர் அவ்விடத்தை பயன்படுத்திக்கொள்வோம் என்று பள்ளிக்கூடத்தினுள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாடை கட்டிப் போட்டு வருகின்றனர்.
இதனால் பள்ளியில் சுகாதார கேடு ஏற்பட்டுவிட்டது. குழந்தைகள் படிக்கவும், விளையாடவும் சிரமமாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments