திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரஜினி ஸ்டோர் SRC ரோடு பகுதியில் உள்ள ராஜா ஸ்டோர், E.B.ரோடு பகுதியில் உள்ள V.K.N. டீ ஸ்டால் மற்றும் தென்னூர் பகுதியில் உள்ள K.P. டீ ஸ்டால் உணவு பாதுகாப்புதுறை ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கொண்டகுழுவால் அந்த நான்குகடைகள் சீல் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ரஜினி ஸ்டோர் கடையில் (22.06.2022) அன்று, ராஜா ஸ்டோர் கடையில் (22.11.2022) அன்று,V.K.N. டீ ஸ்டால் கடையில் (11.10.2022) மற்றும் K.P. டீ ஸ்டால் கடையில் (28.07.2022) அன்று முதல் ஆய்வில் அந்தகடையில் தமிழகஅரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து தலா ரூ.5000/-அபராதம் விதிக்கப்பட்டு அரசுகணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்தகடையில் (22-11-2022) அன்று நான்கு கடைகளையும் ஆய்வுசெய்யும் போது தமிழகஅரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அன்றைய தினத்தன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவுபாதுகாப்பு ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் மேற்கண்ட நான்கு வணிககடைகள் 26.11.2022 அன்று சீல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்…. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்தநிகழ்வில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments