போதைப்பொருள் புழக்கத்தால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணாக்கர்கள் முதல் இளைய தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்பட்ட வருகின்றனர்
திருச்சி கேகே நகரைச் சேர்ந்த மாதவன் – காவியா தம்பதியினரின் மகனும், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்றுவரும் எம்.கே மிர்த்திவிக் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து சாய்ஜி ரோலர் அகாடமி வரையிலும் 6 கிமீ தூரம் ஸ்கேட்டிங் சென்றவாறு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
2 வயது பள்ளிமாணவனின் இந்த சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதுடன், சாதனை சான்றிதழையும் அப்துல் கலாம் “யங் அச்சிவர்ஸ் – 2025” விருதையும் பள்ளிமுதல்வர் வித்யா மாணவருக்கு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேசன் மாநில செயலாளரும், சாய்ஜி ரோல்பால் அகாடமி நிறுவனருமான கோவிந்தராஜ், துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments