எடுபடுமா இரண்டாம் கட்ட யாத்திரை ? அடுத்த குண்டை வீசப்போகும் அமித்ஷா !!
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் ஜூலை 28ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை துவக்கினார். இந்நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா உரையாற்றினார். இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், 22 நாட்களாக 41 சட்டசபை, 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 178 கிலோ மீட்டர், அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். முதல் கட்ட யாத்திரையை ஆகஸ்ட், 22ம் தேதி திருநெல்வேலியில் நிறைவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட யாத்திரையை தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து நாளை முதல் அண்ணாமலை துவக்குகிறார். தொடர்ந்து தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லுார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். கோவை, நீலகிரிஎன, செப்டம்பர் 28ம் தேதி வரை அவர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வதுதான் பிரதமர் மோடியின் வழக்கம். நாடாளுமன்றத்தில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டத்தொடரில், நாடு முழுதும் ஒரே சமயத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் வகையில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என, செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே என்ன நடக்கப்போகிறது என்பது பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு மட்டுமே வெளிச்சம் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவித இட ஒதுக்கீடு சட்டமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்த பொழுது. நாடாளுமன்றத்தில் முதன்முதலாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2010ல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது. இதை, நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியிருந்தால் சட்டமாகியிருக்கும். காங்கிரஸ் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தாலும், இப்போது கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 'இந்தியா' கட்சிகள் எதிர்க்கின்றன.
உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆவதை விரும்புவதில்லை. மேலும் அங்கு எதிர்க்கட்சிகளில் பெண் தலைவர்கள் அதிகமில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமெண்ட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவை, பிரதமர் மோடி லோக்சபாவில் சந்தித்துப் பேசினார். அப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது சட்டமாகும் என சோனியா கேட்டாராம். இந்த கேள்வியை மோடி எதிர்பார்க்க வில்லையாம். ஏற்கனவே நிலாவில் 'சந்திராயன் விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைத்து மகளிருக்கு முக்கிய இடம் கொடுத்தார் பிரதமர். சமீபத்தில் ரயில்வே போர்டின். சேர்மனாக ஜெயா வர்மா என்ற பெண்மணி முதல் முதலாக உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டார். இந்திய ரயில்வேயின் இத்தனை வருட சரித்திரத்தில், ஒரு பெண் இந்த பதவியில் இதுவரை இருந்தது கிடையாதாம். அதோடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சமீபத்தில் குறைத்து நாட்டிலுள்ள பெண்களின் சுமையை குறைத்துள்ளார் மோடிஇதைவைத்து பார்த்தால், இந்த சிறப்பு கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது. இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. நாடெங்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க., உட்பட பல வட மாநில எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. இந்த கணக்கெடுப்பை, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் நடத்தி முடித்து விட்டார். இதை தடை செய்ய உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிர்கொள்ள, மகளிருக்கு தேர்தல்களில் போட்டியிட 33 சதவிகித இடஒதுக்கீடு தருவது தான் சரியான முடிவாக இருக்கும் என மோடி முடிவெடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர்.
ஆக ஆக இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் சமீபத்தில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்று நடத்திய சர்வேயில் மோடியை 80 சதவிகித இந்திய மக்கள் ஆதரிக்கிறார்கள் என வெளியான தகவல் ஓய்வதற்குள் அடுத்த அஸ்திரமாக மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவை கையில் எடுத்திருக்கிறது பாஜக தமிழகத்தில் எப்படி எம்.ஜி.ஆருக்கு பெண்கள் பக்கபலமாக இருந்தார்களோ அதே அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துவிட்டார் என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision