திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, நான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 311 உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகாமையில் ஐந்தாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments