Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக திருச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் எதிரில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டை புறக்கணித்து. தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பகுதி கழகச் செயலாளர்கள் மேகன், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரெக்ஸ், லெனின், வெற்றிச்செல்வன், அருள்ராஜ், முபாரக்அலி, ஆரோக்கியராஜ், அன்புராஜ், ராயல்ராஜா, கனியமுதன், சேகர், சிவா,ஹேப்பிபுல்ரகுமான் பொன்முருகேசன், இளங்கோ, முகம்மதுராஜா, சர்வேஷ், வெங்கடேஷ், அறிவுச்சுடர், ஜமாலுதீன், ஜெயராமன்,தேவராஜ், கார்த்திக், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தோழர்கள், மாநில மாவட்ட மாநகர, பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட கிளை கழகச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து பாசிச மோடி அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *