திருச்சியில் கஞ்சா பறிமுதல் - விற்பனை செய்த ஒருவர் கைது

திருச்சியில் கஞ்சா பறிமுதல் - விற்பனை செய்த ஒருவர் கைது

திருச்சி தில்லைநகர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்று இரவு திருச்சி உய்யகொண்டான் ஆற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ரோந்து வாகனத்தில் வந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை செய்தபோது,பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து அவரை கைது செய்த உறையூர் காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே
இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement