திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி கிரைண்டர் மோட்டாரில் மறைத்து ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான 349 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO






Comments