தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர் .இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே திருப்பதி கோயிலுக்கு சென்று இருவரும் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையம் வந்து பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.
ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெறும் என சொல்லி வரும் நிலையில் தங்களது திருமணத்திற்கான பத்திரிகைகள் மற்ற பொருட்களை வைத்து ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் வந்திருக்கலாமம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்த இருவரும் விமான நிலையத்தில் பணிபுரியும் உயரம் குறைவான பெண் செல்பி எடுக்க முயற்சி செய்தார் .அப்பொழுது விக்னேஷ் சிவன் அவரது கைபேசியை வாங்கி இருவரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் ஒருபுறம் அவரிடம் கேள்விகள் கேட்கும் பொழுது அவர் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று இருந்த நிலையில் இவர் செல்பி எடுக்க முயற்சி செய்த போது இருவரும் நின்று நிதானமாக செல்பி எடுத்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO






Comments