Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

இன்ஸ்ட்டாவில் இயற்கை பொருட்கள் விற்பனை- அசத்தும் அபிராமி

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தவறான பாதையில் பயணிக்கின்றார்கள் என்ற சூழலில் சரியான முறையில் அதனை பயன்படுத்தி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார் தஞ்சையை சேர்ந்த அபிராமி. கைவினை கலைஞர்கள், மறுசுழற்சி பொருள் வடிவமைப்பவர்கள், மூலிகை உற்பத்தியாளர்கள் இவர்களுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த பயணம் குறித்த அபிராமி பகிர்ந்து கொள்கையில், ”உணவு தொடங்கி உடை வரை எல்லாவற்றிலும் மக்கள் ஆர்கானிக் பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் வாங்கி உண்ணும் ஆர்கானிக் உணவின் உண்மைத்தன்மை பற்றியும், ஆர்கானிக் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உண்மைத்தன்மையைபற்றியும் யாரும் யோசிப்பதில்லை. வெறும் கவர்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வைத்தே, அவை ‘ஆர்கானிக்’ என்பதை உறுதி செய்து விடுகிறார்கள்” என்றவர், மூலிகை பொருட்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய குடும்பங்களை ஒருங்கிணைத்து, சுத்தமான ஆர்கானிக் பொருட்களை கண்டறிய முயற்சி செய்கிறார். குறிப்பாக, தன்னுடைய வீட்டிலேயே முயன்று பார்த்தேன்.

”ஆர்கானிக் பொருட்களில், 100 சதவிகிதம், 75 சதவிகிதம், 50 சதவிகிதம், 30 சதவிகிதம் என அளவீடுகள் உண்டு. ஆனால் நாம் இதை பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பதில்லை. அதேசமயம், சிறந்த ஆர்கானிக் மூலிகை பொருட்களை எப்படி சோதித்து பார்ப்பது, எப்படி பார்த்து வாங்குவது என்பதும் தெரியவில்லை. இந்த அசவுகரியங்களை போக்கவே, சில இயற்கை பொருட்களை நானே தயாரித்து கொடுக்கிறேன். மூலிகை குளியல் பொடி தொடங்கி, அழகு சாதனப்பொருட்கள் வரை 100 சதவிகிதம் ஆரோக்கியமானதை ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் இன்றி தயாரிக்க வழிகாட்டுகிேறன். அதுபற்றிய விளக்கங்களும், வழிகாட்டுதல்களும், மாதிரி பொருட்களும் என்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் நிறைந்திருக்கின்றன” 

விலை குறைவாக கொடுப்பதால் தரமற்றதாக கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். விலை குறைவாக இருக்க வேண்டும் அதே நேரம் அதிக தரமானதாக இருக்க வேண்டும் என்று நான் மட்டுமே இதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். இயற்கை பொருட்களை பயன்படுத்தி வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தாலும் அது எப்படி பயன்படுத்துவது எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதில் தான் சிக்கல் இருந்தது. அதனை இந்த இன்ஸ்டால் பக்கங்கள் மூலம் தெளிவுபடுத்துவதால் என்னை தேடி வரும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து என்னுடன் பயணிக்கின்றனர்.

https://instagram.com/mithrai_naturals?igshid=YmMyMTA2M2Y என்னுடைய இன்ஸ்டா பக்கம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக களமிறக்கப்படும் மரப்பொருட்களும், மறுசுழற்சி பொருட்களுமே அதிகமாக நிறைந்திருக்கிறது. கூடவே ரசாயன பொருட்களுக்கு எதிரான மூலிகை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் நிறைந்திருக்கின்றன. என்றார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. முடித்திருக்கும் அபிராமி, சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமான முறையில் கையாண்டு, நல்ல விஷயங்களை டீன் ஏஜ் வயதினர் மத்தியில் பரப்பி வருகிறார். ”நாம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், அயல்நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி தொடங்கி விட்டன இயற்கை பொருட்களையே பயன்படுத்தி வந்த நாம் தற்பொழுது பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது அதிகமாகும் கொண்டுள்ள கொண்டுள்ளோம் என்பதையும் உணரும் தருவாயில் நம்மால் முடிந்த வரை பிளாஸ்டிக் இல்லா பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

 

அதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை தேட ஆரம்பித்தேன். அந்த தேடல், இன்று என்னை பல தளங்களில் பயணிக்க வைக்கிறது” என்றவர், சமூக வலைத்தளங்களில் ‘ஆக்டிவ்’ ஆக செயல்படுகிறார். குறிப்பாக பிளாஸ்டிக் எதிர்ப்பு சம்பந்தமான பதிவுகள் இவரது சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக இடம்பெறுகிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் இளம் வயதினர், அதற்கான மாற்று இயற்கை பொருட்களை கேட்க, அபிராமி கைவினை கலைஞர்கள் மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களை அணுகி இருக்கிறார். அவர்களும், தங்களால் முடிந்த பொருட்களை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர். ”தென்னமர கொட்டாங்குச்சியில் மரக் குவளை, மர ஸ்பூன், மூங்கில் குடுவைகளில் உருவான பாட்டில், வேப்பமர சீப்பு, வாழைநார் இழை மற்றும் பீர்க்கங்காய் நார் இழைகளில் உருவாகும் உபயோகப் பொருட்கள், மூங்கில் குச்சி பொருட்கள், சுரைக்காய் குடுவைகளில் உருவாகும் மற்ற மாற்று பொருட்கள் என… நிறைய பொருட்களை கைவினை கலைஞர்கள் மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களை கொண்டு உருவாக்கினோம். இதுதவிர மூங்கில் பாட்டில்… போன்றவை ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன. இவை தரத்தில் உயர்வானவை. விலை மதிப்பில் நடுநிலையானவை. அப்படி இருந்தும், நம் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்க தயங்குகிறார்கள்” என்றவர், பிளாஸ்டிக் ஒழிப்பு மூலமாக இதுபோன்ற இயற்கை பொருள் உற்பத்தியையும் ஊக்கப்படுத்த முடியும். கூடவே, கைவினை கலைஞர்களையும் உருவாக்க முடியும் என்கிறார்.

”பிளாஸ்டிக் மாற்று பொருட்களை தேடிய பயணத்தில் நிறைய கைவினை கலைஞர்களையும், மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மிக குறைந்த விலையிலேயே பொருட்களை தயாரிக்கிறார்கள். ஆனால் வர்த்தகம் என்ற பெயரில், மர பொருட்கள் பலரது கைகளுக்கு கைமாறி மக்களை சென்றடைவதால்தான், மறுசுழற்சி மாற்று பொருட்களின் விலை அதிகமாக இருப்பதுபோல தோன்றுகிறது” என்றவர், இதற்கு தன்னுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாகவே தீர்வு கண்டிருக்கிறார். கைவினை கலைஞர்களின் புதுப்புது படைப்புகள் இவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு வாங்கும் வகையில் இன்ஸ்டா பக்க கணக்கை பராமரிக்கிறார். பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிலைப்படுத்து வதுடன், கைவினை மற்றும் மறுசுழற்சி பொருள் வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.

இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தநினைப்பவர்களுக்கு 85 வகையான பொருட்களை தயார் செய்து வருகிறேன். இயற்கையாகவே எல்லாம் கிடைக்கும் பட்சத்தில் செயற்கையாக செய்யும் ஒவ்வொன்றும் நமக்கான அழிவையே தேடி தரும் அதிலிருந்து நம்மையும் நம் தலைமுறையையும் காக்க முயற்சிகளும் செய்ய வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்த தொடக்கமானது என் வாழ்வில் மிகப்பெரிய மாற்ற த்தையும் உருவாக்கி இருக்கிறது என்றார் அபிராமி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *