சென்னையில் செயல்படும் தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அர்ப்பணிப்பு மனதோடு பணியாற்றிய ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டம் லால்குடி எல்.என்.பி. பள்ளி ஆசிரியை விஜயகுமாரிக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பிரகாஷ் ஆகியோர் விருது வழங்கினர். விருது பெற்ற ஆசிரியை விஜயகுமாரியை சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQsti
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments