Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பயிற்சி வகுப்புக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் வழியனுப்பி வைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி துறையூரில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட 61 மாணவ, மாணவிகளை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் இன்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக பழங்குடியினர் நலத்துறை நடத்தும் “உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற நிகழ்வின் மூலம் பழங்குடியினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற பழங்குடியினர் மாணவ/மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட 23 பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

குளிர்பதன மற்றும் ஏசி மெக்கானிக், இரண்டு சக்கர வாகன தொழில் நுட்ப வல்லுநர். நான்கு சக்கர வாகன தொழில் நுட்ப வல்லுநர், பராமரிப்பு தொழில் நுட்ப வல்லுநர், வீட்டு வயரிங் மற்றும் மோட்டார் ரிவைண்டிங், ஃபோர்க் லிஃப்ட் இயக்குபவர், வெல்டிங் தொழில் நுட்ப வல்லுநர், தொழில்துறை தானியங்கி நிபுணர், மின்சார வாகன தொழில் நுட்ப வல்லுநர், உதவி சமையலர், பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு பயிற்சி, வலை தள மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர், ரோபோடிக் செயல்முறை தானியங்கி பொறியாளர்,

முன் அலுவலக நிர்வாகி, பொது கடமை உதவியாளர், CNC இயந்திரம் இயக்குபவர், CNC இயந்திரம் இயக்குபவர்-செங்குத்து இயந்திர மையம், CNC இயந்திரம் இயக்குபவர், அழகு சிகிச்சையாளர், வரைகலை வடிவமைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி கணக்கீடு, மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சிகளை கீழ்க்கண்ட புகழ்பெற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

சி ஒய் மையுடெக் ஆனந்த் பிரைவேட் லிமிடெட், கியோவா கேஸ்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் இஞ்சினியரிங் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், சாந்தி கியர்ஸ் லிமிடெட், டியூப் இன்வெஸ்மென்ட் ஆஃப் இந்தியா (TI), இஸட் எஃப் ரானே ஆட்டோமேட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜேஎம்இசி-மேனேஜ்மென்ட் மற்றும் பொறியியல், கேயுஎன் கேப்பிடல் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ், சிஏஎஃப்எஸ் இன்ஃபோடெக், எஸ்எஸ்எச்ஆர்டி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், டெக் மகேந்திரா, அசோக் லேய்லெண்ட், எம்ஆர்எஃப் டயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், தியாகராஜன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *