அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர் 5 அன்று தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற முடிவின்படி இன்று திருச்சி மாநகர் மாவட்ட இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 29.08.2025 மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகம் மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் தோழர் க.சுரேஷ், MC தலைமை தாங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பா.லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் S.சிவா,மாவட்டக்குழு உறுப்பினர் M.R.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-ஏல்) லிபரேசன் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் K.ஞான தேசிகன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற 05.09.2025 ஆம் தேதியன்று திருச்சி, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே, மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. திரளான எண்ணிக்கையில் இடதுசாரி கட்சிகளின் தோழர்களை திரட்டுவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments