வழிப்பறி, தொடர் குற்றங்கள் - குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது!
திருச்சி மாநகரம் பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னேரிபுரம் சந்திப்பு அருகில் கடந்த 14ம் தேதி மதியம் மளிகை கடையில் வேலை செய்து வரும் பொன்மலைப்பட்டி சேர்ந்த வாதி காமராஜ்(36). இவர் மளிகை கடைக்கு சாமான்கள் வாங்க வேண்டி ரூ.5000 பணத்துடன் சென்று கொண்டிருந்த போது மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த இளவரசன்(27)) என்பவர் வாதியை கூப்பிட்டு தண்ணி அடிக்க செலவுக்கு பணம் கேட்டு, வாதி பணம் இல்லை என்று மறுக்கவே, இளவரசன் முதுகில் மறைத்து வைத்திருந்த சுமார் 2 1/2 அடி நீளமுள்ள அருவாளை எடுத்து வாதியிடம் காட்டி வாதியின் சட்டை பாக்கெட்டிலிருந்த ரூ.5000-த்தை பறித்துக் கொண்டதாக காமராஜ் பொன்மலை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் கொடுத்தார்.
இளவரசன் என்பவர் மீது பொன்மலை காவல் நிலையத்தில் ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்து இளவரசனை கைது செய்து புலன் விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மேற்படி இளவரசன் மீது திருச்சி மாநகரத்தில் ஏற்கனவே பொன்மலை காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், உறையூர் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆகியவற்றில் தலா ஒரு வழக்கும், பாண்டிச்சேரி மாநிலத்தில் துணை சபாநாயகரை கொலை செய்த ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
எனவே, இளவரசன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரியவருவதாலும், அவனது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆணையின்படி மேற்படி இளவரசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.