திருச்சி மாவட்டத்தில் அல்லூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் விஜேந்திரன்.இவர் 2019 ஆம் ஆண்டு ஊராட்சி தலைவர் விஜயேந்திரனிடம் வேலை வாங்கித் தருவதாக ஐந்து லட்ச ரூபாய் கேட்டுள்ளார். மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு வேலை வாங்கி கொடுத்தவுடன் மீதி தொகை கொடுப்பதாக கூறியுள்ளார். தற்போது வரை கொடுத்த பணத்தையும் திருப்பிதரவில்லை வேலையும் வாங்கி தரவில்லை.
இதனால் அவரிடம் பணம் கேட்ட பொழுது உன் தலையை எடுத்து விடுவேன் என அல்லூர் சீனிவாசன் பஞ்சாயத்து தலைவர் விஜயேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக விஜயேந்திரன் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 இந்த புகாரின் பேரில் சீனிவாசன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  தொடர்ந்து இவர் மீது அதிகமான புகார்கள் வருவதால் இதுவரை காவல்துறையினர் கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments