கடந்த (10.08.2021)-ந் தேதி கே.கே. நகர் காவல்நிலைய பகுதியில் உள்ள ஒருவரை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பபதிவு செய்து, வழக்கின் எதிரியான சுரேஷ் (49), த.பெ கோவிந்தராஜுலு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (11.10.2021)-ந் தேதி மேற்படி எதிரி சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவர்களால் மேற்படி எதிரி சுரேஷ் என்பவருக்கு இ.த.ச பிரிவு 307-ன்படி 7 வருடங்கள் சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.2,000/-மும், அபராதம் கட்ட தவறினால் மூன்று மாத கால சிறை தண்டனையும், இ.த.ச பிரிவு 324-ன்படி 1 வருடம் கடுங்காவல் தண்டனையும், இரண்டு சிறைதண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்திய கே.கே.நகர் காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments