திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ-அபிஷேகபுர கோட்டம் (மண்டலம் எண்.05), 28-வது வார்டு, தென்னூர், காமராஜ் நகரில் (பிள்ளையார் கோவில் எதிரில்) பிரதான சாலையில் பாதாள சாக்கடை நீர் சாலையின் மேல் ஊற்று போல் அடிக்கடி வழிந்தோடுகிறது.
இது குறித்து அப்பகுதிக்குட்பட்ட சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்படி முக்கிய சாலையில் இதுபோன்று இருப்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments